உசிலம்பட்டி: விஷம் அருந்தியவர் உயிரிழப்பு

70பார்த்தது
உசிலம்பட்டி: விஷம் அருந்தியவர் உயிரிழப்பு
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பாப்பாபட்டி கரைபட்டியை வசிக்கும் வெள்ளையாணை என்பவரின் மகன் சத்தியராஜ் (38) என்பவருக்கு பல வருடங்களாக வயிறு வலி இருந்துள்ளது. இதற்கு நாட்டு மருந்து சாப்பிட்டு வந்துள்ளார். இருப்பினும் நேற்று முன்தினம் (மார்ச் 30) வயிறு வலி பொறுக்க முடியாமல் வீட்டில் இருந்த பூச்சி மருந்தினை சாப்பிட்டு மயங்கி கிடந்துள்ளார்.

அவரை மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அங்கு பரிசோதித்த டாக்டர் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து இவரது மனைவி பத்மாவதி உத்தப்பநாயக்கனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி