உசிலம்பட்டி: பள்ளிக்கு கல்விச்சீர் வழங்கிய முன்னாள் மாணவர்கள்

54பார்த்தது
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சடச்சிபட்டியில் அமைந்துள்ள டி. இ. எல். சி ஆரம்பப் பள்ளியில் சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இப்பள்ளியின் 75வது ஆண்டு விழா நேற்று (மார்ச். 28) நடைபெற்றது. இந்த ஆண்டு விழாவின் போது இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சமூக வலைதளம் மூலம் ஒன்றிணைந்து சுமார் 50 ஆயிரம் மதிப்பிலான பள்ளிக்கு தேவையான பிரோ, டேபுள், சேர் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை கல்வி சீராக ஊர்வலமாக எடுத்து வந்து வழங்கியது. இந்நிகழ்வு பலரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது. , தொடர்ந்து பள்ளியின் ஆண்டு விழாவில் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி