
மதுரை: மூக்கையாதேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய அமைச்சர்
அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான முக்கையா தேவர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியில் அமைந்துள்ள நினைவிடத்தில் இன்று (ஏப். 4) வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் மாவட்ட செயலாளர் சேடப்பட்டி மணிமாறன், வெங்கடேசன் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ முத்துராமலிங்கம் உள்ளிட்ட திமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.