உசிலம்பட்டி: இரயில் மறியலில் ஈடுபட முயன்ற விவசாயிகள் கைது

50பார்த்தது
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி இரயில் நிலையத்தில் தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில துணை பொதுச் செயலாளர் நேதாஜி தலைமையிலான 25 விவசாயிகள் இரயில் நிலையத்திற்கு ஊர்வலமாக வந்து இரயில் மறியலில் ஈடுபட முயன்றனர். இந்த தகவலறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பணியில் இருந்த மதுரை மாவட்ட இரயில்வே காவல் துணைக் கண்காணிப்பாளர் காமாட்சி தலைமையிலான இரயில்வே போலீசார் மற்றும் உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசார் இரயில் மறியலில் ஈடுபட முயன்ற 25 விவசாயிகளை இன்று (மார்ச் 23) கைது செய்தனர். மத்திய மற்றும் பஞ்சாப் அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி இரயில் மறியலில் ஈடுபட முயன்ற விவசாய சங்கத்தினரை கைது செய்தது உசிலம்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி