உசிலம்பட்டி: காவலர் கொலை. உறவினர்கள் சாலை மறியல்.

80பார்த்தது
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நாவார்பட்டியில் நேற்று முன்தினம் டாஸ்மார்க் கடை அருகில் மது அருந்தும் போது கஞ்சா வழக்கில் கைதாகி வெளியே வந்தவர்களுக்கு அறிவுரை வழங்கிய காவலர் முத்துக்குமார் கல்லால் தாக்கி படுகொலை செய்யப்பட்டார். , இந்த தாக்குதலின் போது காவலருடன் உடனிருந்த அவரது உறவினரான லோடு மேன் ராஜாராம் என்பவரும் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். ,

இந்நிலையில் நேற்று (மார்ச். 28) குற்றவாளிகளை கைது செய்ய கோரியும், அரசின் சார்பில் உரிய நிவாரணம் வழங்க கோரியும், காவலரின் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காவலரின் உடல் வைக்கப்பட்டுள்ள உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை முன்பு உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். ,

தொடர்ந்து உடற்கூறாய்வு முடிந்த காவலரின் உடலை வாங்க மறுத்து உறவினர்களும், பார்வட் ப்ளாக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ கதிரவன், பார்வட் ப்ளாக் தலைவர் முருகன் ஜீ தலைமையிலான நிர்வாகிகள் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக தொடர் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். ,

உசிலம்பட்டி அரசு மருத்துவமனை மட்டுமல்லாது உசிலம்பட்டி தேவர் சிலை முன்பும் ஒரு தரப்பினர் மறியலில் ஈடுபட்டதால் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி