'எம்புரான்' திரைப்படத்திற்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என கேரள உயர்நீதிமன்றத்தில் பாஜகவின் வி.வி.விஜேஷ் என்பவர் மனுத்தாக்கல் செய்துள்ளார். 2002 கோத்ரா கலவரத்தை தழுவி எடுக்கப்பட்ட காட்சிகளில் இந்திய ராணுவம் குறித்து தேவையற்ற கருத்து கூறப்பட்டுள்ளதாகவும், புலனாய்வு அமைப்புகளின் நம்பகத் தன்மையை சிதைக்கும் வகையில் உள்ளதாகவும் குற்றச்சாட்டு வைத்துள்ளார். இப்படம் சமூகத்தில் அசாதாரண சூழலை உருவாக்கும் வகையில் உள்ளது என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.