கார் மோதியதில் அடையாளம் தெரியாத நபர் பலி
மதுரை மாவட்டம் மேலூர் அருகே நடந்த சாலை விபத்தில் அடையாளம் தெரியாத நபர் உயிரிழந்தார். நேற்று முன்தினம் (16ஆம் தேதி) இரவு 11 மணி அளவில் திருச்சி மதுரை நான்கு வழி சாலையில் சபரீஸ் ஹோட்டல் அருகே சாலையை கடக்க முயன்ற 50 வயது மதிக்கத்தக்க நபர் மீது புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூரை சேர்ந்த அழகர் என்பவர் ஓட்டி வந்த கார் மோதியதில் படுகாயம் அடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார் என கூறப்பட்டுள்ளது. இது குறித்து மேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உயிரிழந்த நபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது போன்ற விபரங்களை விசாரணை மூலம் சேகரித்து வருகின்றனர்.