புதிய உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்த மத்திய அமைச்சர்

73பார்த்தது
புதிய உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்த மத்திய அமைச்சர்
மதுரை மாவட்டம் மேலூர் அருகே பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாமை மத்திய அமைச்சர் தொடங்கி வைத்தார்.

தமிழக பாரதிய ஜனதா கட்சி சார்பாக நாம் மேற்கொண்டு வருகின்ற உறுப்பினர் சேர்க்கை பணிகளின் ஒரு அங்கமாக, மதுரை கிழக்கு மாவட்டம் மேலூர் சட்டமன்ற தொகுதியில் புதுசுக்காம்பட்டி பஞ்சாயத்திற்குட்பட்ட பூத் எண் 131-ல் உறுப்பினர் சேர்ப்பதற்கான பணிகளில் நேற்று (செப்.15) மத்திய அமைச்சர் எல். முருகன் தலைமையில் நடைபெற்றது.

அப்பகுதி மண்டலத் தலைவர் சுதர்சன் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த இந்த உறுப்பினர் சேர்க்கை நிகழ்வில், அந்த கிராமத்தில் வசிக்கின்ற பொதுமக்கள் தாங்களாகவே முன் வந்து, பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர்களாக சொந்த விருப்பத்துடன் இணைந்து கொண்டனர் என்று மத்திய அமைச்சர் எல் முருகன் தெரிவித்தார். இந்நிகழ்வில் பாஜக முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி