மதுரை நகரம் - Madurai City

மதுரையில் தொடர்கனமழை.. வைகையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளநீர்

மதுரையில் கடந்த நான்கு நாட்களாக மாலை நேரங்களில் அதிக கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று முன்தினம்(அக்.12) அதிகபட்சமாக 16 சென்டிமீட்டர் அளவிற்கு கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் மதுரை மாநகர் பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. தேனி, வருசநாடு, மேகமலை ஆண்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. தொடர்ச்சியாக வைகை அணையில் இருந்து உபரி நீர் மதகுகள் வழியாக திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் மதுரை புறநகர் கிராம பகுதிகளில் இரவு நேரங்களில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக வைகை அணையில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மதுரை மாநகர் பகுதிகளில் ஆரப்பாளையம், யானைககல் தரைப்பாலம் ஓபலா படித்துறை பாலம், குருவிக்காரன் சாலை உள்ளிட்ட பகுதிகளில் வைகை அணையின் வெள்ள நீர் ஆர்ப்பரித்து சென்று கொண்டிருக்கிறது. குறிப்பாக அழகர் வைகை ஆற்றில் இறங்கும் பகுதிகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த பகுதியில் மதுரை மதிச்சியம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஆற்றில் யாரும் இறங்கவோ, குளிக்கவோ கால்நடைகளை இறக்கவோ கூடாது, வைகை கரையோரம் இருக்கும் மக்கள் யாரும் ஆற்றில் இறங்க கூடாது என போலீசார் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

வீடியோஸ்


జగిత్యాల జిల్లా