மதுரை: தல்லாகுளம் பெருமாள் கோவிலில் திருத்தேர் வைபவம்

54பார்த்தது
மதுரை தல்லாகுளம் அருள்மிகு பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோவிலில் நடைபெறும் பிரசித்தி பெற்ற விழாக்களில் ஒன்றான புரட்டாசி மாத பிரமோற்சவ பெருந்திருவிழா கடந்த 4-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வரும் 15ம் தேதி வரை நடைபெறுகிறது.


பிரமோற்சவ விழாவை முன்னிட்டு தினமும் காலையில் பெருமாள் தாயார்களுடன் பல்வேறு அலங்காரத்திலும், மாலையில் பல்வேறு வாகனங்களிலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரமோற்சவ பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான திருத்தேர் வைபவம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.

முன்னதாக அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் பெருமாள் எழுந்தருள நடைபெற்ற சிறப்பு பூஜைகளை தொடர்ந்து திருத்தேர் வைபவம் சிறப்பாக நடைபெற்றது.

திருத்தேர் வலம் வந்த பகுதிகளில் எல்லாம் ஏராளமான பக்தர்கள் கோவிந்தா எனும் கோஷம் முழங்கிட சுவாமி தரிசனம் செய்தனர்.

மேலும் விழாக்களில் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தெப்ப உற்சவம் வரும் 14 -ம் தேதி காலை மாலை என இரு வேளைகளில் நடைபெற உள்ள நிலையில், வரும் 15- ம் ஆம் தேதி உற்சவ சாந்தியுடன் விழா நிறைவு பெறுகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி