திமுக மத்திய அரசுக்கு எதிரான கருத்தை பரப்புகிறது-எல். முருகன்

66பார்த்தது
மதுரை மாநகர் செளராஸ்ட்ராபுரத்தில் இன்று நடைபெற்று வரும் உறுப்பினர்கள் சேர்க்கையில் பங்கேற்ற மத்திய இணையமைச்சர் எல். முருகன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில்,

மக்கள் பேராதரவோடு பாஜகவின் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. 15ம் தேதி வரை உறுப்பினர் சேர்க்கை நடைபெறும்.


ஜனநாயக முறையில் பாஜகவில் மட்டுமே உறுப்பினர் சேர்க்கை நடைபெறுகிறது. 11கோடி இலக்கு வைத்து உறுப்பினர் சேர்க்கை நடைபெறுகிறது. வேறு எந்த கட்சியிலும் இப்படி ஜனநாயக முறையில் உறுப்பினர் சேர்க்கை நடைபெறுவதில்லை.


தமிழ்நாட்டில் திட்டமிட்டு ஒரு கருத்தை மத்திய அரசுக்கு எதிராக இரயில் விபத்தில் பரப்பி வருகின்றனர்.
திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் திட்டமிட்டு இதனை செய்து வருகின்றனர்.


மெரீனாவில் 5 பேர் உயிரிழந்தார்கள். அதுபற்றி திமுக கூட்டணி கட்சிகள் பேசினார்களா? மெரீனா சம்பவத்தை மறைக்க திமுக ரயில் விபத்தில் நாடகமாடி கொண்டுள்ளனர்.


திமுகவின் ஆட்சியில் பல்வேறு கட்டணங்களையும், வரிகளையும் உயர்த்தி உள்ளனர். போதைப்பொருளை கட்டுப்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மக்கள் தலையில் வரி மேல் வரி கட்டண உயர்வை விதித்துள்ளனர் என்றார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி