சென்னை மாவட்டம் மடிப்பாக்கம் பள்ளிகரணை பகுதியை சேர்ந்த அருண் - சங்கவி தம்பதியினர் கடந்த 4 நாட்களுக்கு முன்பாக மதுரை கோமதிபுரம் 6ஆவது தெரு பகுதியில் உள்ள அருணின் தாயார் வீட்டிற்கு தம்பதியினர் வந்துள்ளனர்.
அப்போது தம்பதியினர் மற்றும் ஒரு வயது குழந்தையுடன் வளர்ப்பு நாயான மேங்கோவையும் காரில் அழைத்து வந்துள்ளனர். இந்நிலையில் மதுரையிலுள்ள வீட்டிற்கு தண்ணீர் கேன் கொடுக்க வந்த கேட் பூட்டாத நிலையில் வளர்ப்பு நாயான மேங்கோ தெருவிற்கு சென்று பின்பு காணாமல் போயுள்ளது. இதனையடுத்து வளர்ப்பு நாயான மேங்கோவை தேடி மதுரை முழுவதிலும் சுற்றி வருகின்றனர்.
தம்பதியினரின் வளர்ப்பு நாயான மேங்கோ காணாமல் போன நிலையில் அது குறித்தான தகவல் அளித்து கண்டுபிடித்து தரக்கோரி அண்ணாநகர் , கே. கே நகர் , கோமதிபுரம் , மாட்டுத்தாவணி , சிம்மக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் வளர்ப்பு நாயான மேங்கோவின் படத்துடன் 5ஆயிரம் பரிசு அளிக்கப்படும் என நோட்டீஸ் அடித்து ஒட்டி தேடிவருகின்றனர். மேலும் இது தொடர்பாக தம்பதியினர் உருக்கமான ஆடியோவை ஒன்று வெளியிட்டுள்ளனர்.
அதில் எங்க மேங்கோ ரொம்ப நல்ல பையன்! அவன் இல்லாம சென்னைக்கு போக முடியல, அவனுக்கு பண மதிப்பு இல்ல. , எப்டியாவது கண்டுபிடிச்சு தாங்க 5ஆயிரம் பண உதவி செய்கிறோம், அவன் வீட்டிலயே வளர்ந்தவன் அவனுக்கு ரோட்லயே இருக்க தெரியாது எப்படியாவது கண்டுபிடித்து கொடுங்க என பேசியுள்ளார்.