மதுரை மாவட்டத்தில் புறநகர் பகுதிகளைச் சேர்ந்த 10, 000 மேற்பட்டோருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது.
இந்நிலையில் மாநகராட்சி பகுதியில் பல ஆண்டுகளாக அரசு புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் மக்களுக்கும், குடிசை மாற்று வாரியம் - வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசிக்கும் மக்களுக்கு பத்திரம் - பட்டா வழங்கிட வேண்டும், வீடற்ற ஏழை - எளிய மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கிட வேண்டும் எனக் கூறி மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று 3ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களை திரட்டி பெருந்திரளாக மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது.