தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி. கே. வாசன் பேட்டி

66பார்த்தது
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை ஆலோசணைக் கூட்டம் இன்று மதுரையில் நடந்தது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் தலைவர் ஜி. கே. வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:

இன்னும் சில நாட்களில் சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை விழாக்களும் அடுத்த சில நாட்களில் தீபாவளியும் வருவதால் ஏழை மக்களுக்கு ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி, பருப்பு கோதுமை, சர்க்கரை போன்ற அத்தியாவசிய பொருட்களை இருப்பு சரியாக இருக்கிறதா என ஆய்வு செய்து பொதுமக்களுக்கு தடையின்றி வழங்க அரசு முன் வர வேண்டும். தேவையான பொருட்களை பொதுமக்களை அலைக்கழிக்காமல் வழங்க அரசு உத்தரவிட வேண்டும்.

தமிழகத்தில் பால் விலை, வீட்டு வரி, சொத்து வரி, தன் தண்ணீர் வரி, பத்திரப்பதிவு வரி உயர்வு போன்ற சுமைகளை நாளுக்கு நாள் உயர்த்தி வருகிறது. கொள்ளையடிப்பதையே குறிக்கோளாகக் கொண்டுள்ள இந்த அரசுக்கு மக்களைப் பற்றி கவலை இல்லை.


நடிகர் விஜய் துவங்கிய கட்சிக்கு தமாகா சார்பில் வாழ்த்து தெரிவித்துள்ளோம். அவரின் இலக்கு என்ன, மக்களுக்கு அவர் செய்யும் நற்பணிகள் என்ன என்பதை பொறுத்து தான் மக்கள் அவருக்கு அங்கீகாரம் அளிப்பர் என கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி