மதுரை: முதல்வர் கோப்பைக்கான போட்டியில் வாக்குவாதம்

70பார்த்தது
மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நேற்று நடந்த முதல்வர் கோப்பைக்கான மாநில அளவிலான ஆடவர் பிரிவு பள்ளி மாணவர்களுக்கான கோகோ இறுதிப்போட்டியில், கோவை அணியினர் நடுவர்களிடம் வாக்குவாதம் செய்ததால் ஆட்டம் சிறிதுநேரம் தடைபட்டது. ஆடவர், மகளிர் பிரிவு மாநில அளவிலான பள்ளிகளுக்கான கோகோ போட்டிகளில் தலா 38 அணிகள் பங்கேற்றன.

மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் 5 கோர்ட்கள் அமைக்கப்பட்டு அக். 6ல் போட்டி துவங்கிய நிலையில் மழையால் நேற்று (அக். 10) வரை ஆட்டம் தொடர்ந்தது. நேற்று மாலை நடந்த ஆடவர் பிரிவு இறுதிப்போட்டியில் சென்னை, கோவை அணிகள் மோதின. முதல் பாதி ஆட்டம் முடிந்த நிலையில் சென்னை அணி முன்னிலையில் இருந்ததால் கோவை அணியின் பயிற்சியாளர்கள் 4பேர் நடுவர்களிடம் தொடர்ந்து வாக்குவாதம் செய்ததால் ஆட்டம் சிறிதுநேரம் தடைபட்டது.

இரண்டாவது பாதி ஆட்டத்தின் முடிவில் ஒரு புள்ளி வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது. ஆனால் ஏற்க மறுத்து கோவை அணியினர் மைதானத்தை விட்டு வெளியேற மறுத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி