நாடு முழுவதும் இன்று ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் ஆயுத பூஜை கொண்டாடுவதற்கான பொருட்கள் விற்பனை செய்யும் சந்தைகளில் ஏராளமானோர் தங்களது வீடுகளில் வழிபாடு நடத்துவதற்காக பூஜை பொருட்களான வாழைமரகன்று, பழங்கள் , வாசனை திரவிய பொருட்கள் வாங்கி செல்கின்றனர்.
மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தை மாட்டுத்தாவணி காய்கறி மற்றும் பழச்சந்தை , தெற்கு வாசல், ஜெய்ஹிந்த்புரம், அவனியாபுரம், சுப்பிரமணியபுரம் உள்ளிட்ட தினசரி காய்கறி மற்றும் பழச்சந்தைகளில் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை முன்னிட்டு பூஜை பொருட்கள், பொரிகடலை வாசனை திரவியங்கள் பழங்கள் வெற்றிலை பாக்கு பூசணிக்காய் உள்ளிட்ட பொருள்கள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.
கடந்த ஆண்டை விட பூக்கள் மற்றும் பழங்கள் உள்ளிட்ட பொருட்களின் விலை அதிகரித்து காணப்பட்டாலும் பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.