மதுரை: ஓடை உடைப்பு ஏற்பட்டு குடியிருப்பு வாசிகள் கடும் அவதி

69பார்த்தது
மதுரை மாவட்டம் கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட காதக்கிணறு அருகே உள்ள செம்மியேனந்தல் மற்றும் ஆசிரியர் காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பாப்பன்குளம் கிராமப் பகுதியில் இருந்து செல்லக்கூடிய உபரி நீர் ஓடை உடைந்து குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது. இதனால் அந்த பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அந்த பகுதியில் இருந்த ஏராளமான தொழில் நிறுவனங்களுக்குள் வெள்ளநீர் புகுந்த நிலையில் அங்கு வைக்கப்பட்டிருந்த பொருட்கள் முழுவதிலும் நீரில் மூழ்கி சேதம் அடைந்தன.

இதே போன்ற ஒவ்வொரு வீடுகளில் முன்பாக இடுப்பு அளவிற்கு வெள்ள நீர் தொடர்ச்சியாக பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஊருக்குள் வெள்ளம் வருவதை தடுப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர், இருப்பினும் தொடர்ச்சியாக பல்வேறு பகுதிகளில் இருந்து உடைப்பு ஏற்பட்டு வெள்ள நீர் குடியிருப்பு பகுதிகளுக்கு புகுந்து வருவதால் பொதுமக்கள் அச்சத்துடன் இருந்து வருகின்றனர்.

மேலும் குழந்தைகள் முதியவர்கள் வீடுகளை விட்டு வெளியில் செல்ல முடியாத நிலையில் தவித்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி