தனியார் மருத்துவமனையை மிஞ்சும் வகையில் தமிழகத்தில் முதல்முறையாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள காது மூக்கு தொண்டை பிரிவில் வீடியோ நிஸ்டாக்மோகிராபி பரிசோதனை மையம் தொடங்கப்பட்டது.
இதனை அரசு மருத்துவமனை முதல்வர் அருள் சுந்தரேஸ் குமார் மற்றும் தேசிய மருத்துவ ஆணையக் குழு உறுப்பினர் டாக்டர் செந்தில் , ENT துறை தலைவர் டாக்டர். அழகுவடிவேல் ஆகியோர் கலந்துகொண்டு தலைசுற்றலுக்கான வீடியோ நிஸ்டாக்மோகிராபி சிறப்பு சிகிச்சை மையத்தை தொடங்கி வைத்தனர்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய மருத்துவகல்லூரி முதல்வர் அருள் சுந்தரேஸ் குமார் பேசியபோது: -
தலைச்சுற்றல் பாதிப்போடு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு தலைசுற்றலுக்கான காரணத்தை கண்டறிய முடியும்.
தலைசுற்றல் உடலில் எந்த பகுதியில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை கண்டறிய முதன்முறையாக VNG என்ற வீடியோ மூலமாக கண் அசைவுகளை கண்டறியும் முறையில் பாதிப்பை துல்லியமாக கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடியும்.
பல்வேறு காரணங்களினால் தலைசுற்றல் உருவாகக்கூடிய நிலையில் இது போன்ற அதிநவீன சிகிச்சை மையத்தால் நோயாளிகளுடைய பாதிப்பை கண்டறிந்த அதற்கேற்ற தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு நோயாளிகளின் பாதிப்பை எளிதில் குணப்படுத்தமுடியும் எனவும், வருங்காலத்தில் இந்த சிகிச்சை மையத்தை மேலும் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார்.