
சமயநல்லூர்: பேருந்தில் 20 பவுன் நகைகள் திருட்டு
திண்டுக்கல் மாவட்டம் பள்ளபட்டியை சேர்ந்த கார்த்திக் (38) என்ற ரயில்வே ஊழியரின் மனைவி சங்கீதா (30) என்பவர் நேற்று முன்தினம் (ஏப். 5) உறவினர் இல்ல விழாவிற்காக தனியார் பேருந்தில் வந்தவர் சமயநல்லூர், ஊர்மெச்சிகுளத்தில் இறங்கினார். அப்போது அவரது கைபையில் வைத்திருந்த 20 பவுன் நகை திருடு போனது தெரிந்தது. இதுகுறித்து சமயநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.