மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கருப்பட்டி அடுத்துள்ள இரும்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட பாலகிருஷ்ணாபுரம் கிராமத்தில் மாயாண்டி சுவாமி, முனியாண்டி சுவாமி, பகவதிஅம்மன், பட்டத்தரசிஅம்மன், காளியம்மன், சோனைசாமி கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு நேற்று (ஏப். 3) காலை 500-க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து சக்தி கரகத்துடன் கோவிலில் இருந்து புறப்பட்டு சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் ஊர்வலமாக சென்று இரும்பாடி கிராமத்தில் உள்ள வைகை ஆற்றில் கரைத்தனர். சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் பெண்கள் முளைப்பாரி உடன் ஊர்வலமாக சென்றது கண்கொள்ளா காட்சியாக அமைந்தது. தொடர்ந்து வைகை ஆற்றில் பக்தர்கள் பொதுமக்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.