சோழவந்தான்: கோவில் நிலங்களை மீட்க தீவிர நடவடிக்கை.

62பார்த்தது
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி பகுதியில் சில இடங்கள் சோலைக்குறிச்சி முள்ளிப்பள்ளம் ஆகிய பகுதிகளில் சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இடங்களை மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோவில் மார்கழி பூஜைக்காக நிலக்கோட்டை சோலைக்குறிச்சி போத்தி நாடார், சி காத்தார், சுப்பையா நாடார், வீ ‌‌காத்தார் நாடார் , சி. தொ. காத்தார் நாடார், வெள்ளைய முக்கந்தர் நாடார் ஆகியோர் 13 ஏக்கர் நிலத்தை 1930 ஆம் ஆண்டு வழங்கினர். நாளடைவில் பலரும் அதனை போலியான ஆவணங்கள் மூலம் நிலங்களை அவரவர் பெயரில் பட்டா மாறுதல் செய்து ஆக்கிரமித்து இருந்தனர். இது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டு ஆறு மாத காலத்திற்குள் ஆக்கிரமிப்பு அகற்றி நிலங்களை கையகப்படுத்த கடந்த ஜனவரி மாதம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சோழவந்தான் மேம்பாலம் அருகே உள்ள இடங்கள் ரயில் நிலையத்தை தாண்டி உள்ள அனேக இடங்கள் சோலைக்குறிச்சி பகுதியில் உள்ள இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டு சிவகங்கை அறநிலைத்துறை அதிகாரிகள் இணை ஆணையர் பாரதி மதுரை உதவி ஆணையர் வளர்மதி கோயில் உதவி ஆணையர் கணபதி முருகன் சோழவந்தான் சோலைக்குறிச்சி முள்ளிப்பள்ளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வந்து ஆய்வு செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி