தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நேற்று (மார்ச். 9) கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வந்த நிலையில், ஜல்லிக்கட்டு அரங்கத்திற்கு வெளியே இருந்த காய்ந்த சருகுகளில் மாலை நாலு மணி அளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு அருகில் இருந்த பணியாளர்கள் ஓய்வறையில் தீப்பற்றி எரிந்து தீ பரவியது.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு அரை மணி நேர போராட்டத்திற்கு பின்பு தீயை அணைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது. சம்பவம் குறித்து அலங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.