கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அடுத்துள்ள அந்தேரிப்பட்டி கிராமத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீ ராஜகணபதி கோவிலில் இன்று (பிப் 10) மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதை முன்னிட்டு காலை 5 மணிக்கு கணபதி பூஜை, பாலிகா பூஜை, இரண்டாம் கால யாகசாலை பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்ற பின்னர் பூஜைக்கப்பட்ட கலசங்களை எடுத்துக்கொண்டு மேளதாளங்களுடன் உர்வலமாக சுற்றி வந்து கோவில் கோபுரத்திற்கு சென்று ஆச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் பக்தர்கள் மீதும் புனித நீர் தெளிக்கப்பட்டது.
ராஜகணபதிக்கு புனித நீர் ஊற்றி பூஜைகள் செய்த பின் ஸ்ரீ ராஜகணபதி ராஜ அலங்காரத்தில் காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த கும்பாபிஷேக விழாவில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும் கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.