கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த கீழ்குப்பத்தில் அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி அம்பிகை சமேத பெருமாள் திருக்கோவில் தெப்பத்தேர் திருவிழா மற்றும் மஹா கும்பாபிஷேகம் வெகு நடைபெற்றது.
கும்பாபிஷேக விழா கணபதி ஹோமம், கோ பூஜையுடன் தொடங்கியது. தொடா்ந்து யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. 4-ஆம் கால யாக சாலை பூஜைகள் நிறைவடைந்து கோயில் கோபுரத்திலிருந்து புனித நீர் தெளித்து மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கீழ்குப்பம் ஊர் பொதுமக்கள் சார்பாக இந்த தெப்பத் தேர் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
தெப்பத் தேர் திருவிழாவையொட்டி பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் தெப்பத்தேரில் பெருமாள் எழுந்தருளினார். பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கீழ்குப்பம் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.