கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த மூன்று ஆசிரியர்கள் 8 ஆம் வகுப்பு மாணவியை பாலியல் தொந்தரவு செய்த காரணமாக, அப்பகுதி கிராம மக்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாததால் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை தலைமையில் பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்களை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது பெற்றோர்கள் சில கோரிக்கைகளை வைத்து, கோரிக்கையை நிறைவேற்றினால்தான் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப முடியும் என கூறியதாக தெரிகிறது. இது தொடர்பாக எஸ்.பி. தங்கதுரையிடம் கேட்டதற்கு, பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் சில கோரிக்கைகள் வைத்துள்ளனர். அது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டுள்ளதாக தெரிவித்தார்.