கிருஷ்ணகிரி: ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வு; கலெக்டர் ஆய்வு

74பார்த்தது
கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் சார்பாக ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வு 2, 2ஏ முதன்மை தேர்வு நடைபெற்றதை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் சி. தினேஷ் குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இன்று காலையில் தேர்வு எழுத தகுதியுள்ள 251 நபர்களில் 241 நபர்கள் தேர்வு எழுதினர். பத்து நபர்கள் தேர்வு எழுத வரவில்லை. இந்த ஆய்வின்போது வட்டாட்சியர் வளர்மதி, தலைமை ஆசிரியர் மகேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி