கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தேர்வு நிலை பேரூராட்சி அலுவலகத்தில் வட்டார மருத்துவ அலுவலர் மரு. சிவகுமார் அறிவுறுத்தலின்படி, ஸ்பர்ஸ் தொழுநோய் விழிப்புணர்வு முகாம் , தொழுநோய் பரிசோதனை மற்றும் தொழுநோய் எதிர்ப்பு நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது. மேலும் பர்கூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ஹோட்டல்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு தொழுநோய் பரிசோதனை செய்யப்பட்டது. முகாமில் முருகன் NMS, சுகாதார ஆய்வாளர்கள் கந்தவேல், சக்திவேல், ராஜேஷ் உள்ளிட்ட தூய்மை பணியாளர்கள் பேரூராட்சி அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.