கிருஷ்ணகிரி: அதிமுக 2026 - ல் ஆட்சி அமைப்பது குறித்து ஆலோசனைக் கூட்டம்

59பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதிக்கு மத்திய ஒன்றியத்திற்கு உட்பட்ட கொண்டம்பட்டி, மூன்றம்பட்டி, மிட்டப்பள்ளி, சிங்காரப்பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் உள்ள கழக நிர்வாகிகளுக்கு வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டி ஆலோசனை கூட்டம் நடந்தது. 

இந்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் அசோக்குமார் தலைமையில் ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் டி. எம். தமிழ்செல்வம் முன்னிலையில், கழக துணை பொதுச்செயலாளர் கே. பி. முனுசாமி கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார். அப்போது 2026-ல் மீண்டும் அதிமுக ஆட்சி அமைய நீங்கள் தான் காரணமாக இருக்க முடியும் என கேட்டுக் கொண்டு நமது ஆட்சியில் செய்த சாதனைகளை எடுத்துக் கூறி தொண்டர் பிரச்சாரம் செய்யவேண்டும் என கேட்டுக் கொண்டார். முன்னதாக ஒன்றிய செயலாளர் சாமிநாதன் வரவேற்புரை ஆற்றினார். 

இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மனோரஞ்சிதம் நாகராஜ், மாவட்டத் துணைச் செயலாளர் சாகுல் ஹமீத், ஒன்றிய செயலாளர்கள் வேடி, வேங்கன், நகர செயலாளர் சிக்னல் ஆறுமுகம், மருத்துவ அணி மருத்துவர் இளையராஜா, முன்னாள் ஒன்றிய செயலாளர் ஏ. சி. தேவேந்திரன், இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை நகர செயலாளர் அம்ஜத், அண்ணா தொழிற்சங்க ஒன்றிய செயலாளர் வீரமணி உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நகர கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர

தொடர்புடைய செய்தி