PM SVANidhi என்பது வியாபாரிகளுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கும் மைக்ரோ கிரெடிட் திட்டமாகும். இந்த திட்டத்தின்படி சாலையோர வியாபாரிகள், சிறு கடை உரிமையாளர்களுக்கு குறைந்த வட்டியில் ரூ.30,000 வழங்கப்படும். ஆனால் இந்த 30,000 ரூபாய் மொத்தமாக வழங்கப்படாது. முதல் தவணையாக ரூ. 10,000 வழங்கப்படும். அதை கட்டி முடித்தவுடன் இரண்டாவது தவணையாக ரூ. 20,000 வழங்கப்படும். அதை கட்டி முடித்தவுடன் மூன்றாவது தவணையாக ரூ.50,000 வரை வியாபாரிகள் கடன் வாங்க முடியும்.