அத்திகானூர் அரசு உயர்நிலைப்பள்ளி சார்பில் போதைப் பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி.
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம் கண்ணன்டஹள்ளி அடுத்த அத்திகானூர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் போதைப் பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் மாணவ மாணவிகள் பதாதைகள் ஏந்தியவாறு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போதைப் பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்து கோசங்கள் எழுப்பியவாறு நேரடியாக செனறனர். தலைமை ஆசிரியர் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு பேரணியில் ஆசிரியர்கள் புனிதா, நந்தகுமார், சரவணன், பிரபாகரன், ராஜேஸ்வரி, ரவிக்குமார், கோமதி, சேம்ளா, பக்ஷிலா பேகம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.