தொகரப்பள்ளியில் அதிமுக பூத் கமிட்டி ஆய்வு கூட்டம்

58பார்த்தது
பர்கூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் பூத் கமிட்டி ஆய்வு கூட்டம். கழகத் துணைப் பொதுச் செயலாளர் கே. பி முனுசாமி ஆலோசனை வழங்கினார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்றத் தொகுதிக்கு அதிமுக பர்கூர் தெற்க்கு ஒன்றியத்திற்க்கு உட்பட்ட அஞ்சூர், ஜெகதேவி, மகாதேவ கொல்லஹள்ளி, தொகரப்பள்ளி
உள்ளிட்ட கிராமங்களில் வாக்குச்சாவடி பூத் கமிட்டி ஆய்வு கூட்டம் பர்கூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெயபால் தலைமையில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான அசோக்குமார் முன்னிலையில் கழக துணை பொதுச்செயலாளரும் வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினருமான கே. பி முனுசாமி கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்.
இதில் முன்னாள் பர்கூர் சட்டமன்ற உறுப்பினரும், பர்கூர் வடக்கு ஒன்றிய செயலாளருமான சி. வி இராஜேந்திரன்,
மாவட்ட எம். ஜி. ஆர் மன்ற இளைஞர் அணி செயலாளர் எஸ். எம் மாதையன், வர்த்தக அணி செயலாளர் தூயமணி, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை இணையச் செயலாளர் பிரபு
உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி