ஓசூர் - Hosur

சூளகிரி அருகே ரேஷன் அரிசி கடத்திய இரண்டு பேர்

சூளகிரி அருகே ரேஷன் அரிசி கடத்திய இரண்டு பேர்

கிருஷ்ணகிரி மாவட்ட உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளா் ராஜசேகரன் தலைமையில் போலீசார் சூளகிரி அருகே அஞ்சலம் சந்திப்பில் வாகனத் சேதனையில் நேற்று (செப்-18) ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாகச் வந்த சரக்கு வாகனத்தைத் தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 50 கிலோ எடை கொண்ட 30 மூட்டைகள் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதை அடுத்து, வாகன டிவைர் தரணி (20) வாகன உரிமையாளா் முருகன் (39) ஆகிய 2 பேரிடம் விசாரணை நடத்தினா். விசாரணையில் இருவரும் முகலூா், உலகம், உள்ளிட்ட பல பகுதிகளில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி வந்து சூளகிரியில் உள்ள உணவகங்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதை அடுத்து சரக்கு வாகனத்துடன் ரேஷன் அரிசியைப் பறிமுதல் செய்த போலீசார் டிரைவைர் முருகன், தரணி ஆகியோரைக் கைது செய்தனா்.

வீடியோஸ்


கிருஷ்ணகிரி
போச்சம்பள்ளி அருகே நண்பனை பீர்பாட்டிலால் தாக்கியவர் கைது
Sep 19, 2024, 00:09 IST/பர்கூர்
பர்கூர்

போச்சம்பள்ளி அருகே நண்பனை பீர்பாட்டிலால் தாக்கியவர் கைது

Sep 19, 2024, 00:09 IST
கிருஷ்ணகிரி மவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள ஏநாலம்பட்டியைச் சேர்ந்தவர் தங்கவேல் (43) விவசாயி. இவருடைய நண்பர் சென்னகிருஷ்ணன். இருவரும் கடந்த (செப்-16ம்) தேதி போச்சம்பள்ளி சிப்காட் பகுதியில் உள்ள மதுக்கடைக்கு சென்றனர். அப்போது தங்கவேல், சென்னகிருஷ்ணன் வைத்துள்ள காரை வாடகைக்கு கேட்டுள்ளார். ஆனால் காரை கொடுக்க மறுக்கவே இதனால் தகராறு முற்றிய நிலையில், அங்கிருந்த பீர்பாட்டிலால் சென்னகிருஷ்ணனை தங்கவேல் தாக்கினார். மேலும், அங்கு இருந்தத சென்னகிருஷ்ணனின் கார் கண்ணாடியை அடித்து நொறுக்கினார். இதை கண்ட அருகில் இருந்தவர்கள் காயமடைந்த சென்னகிருஷ்ணனை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில், போச்சம்பள்ளி போலீசார் வழக்கு பதிந்து, தங்கவேலை கைது செய்தனர்.