ஓசூர் - Hosur

நல்லூர்: ரூ. 10 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் பறிமுதல்

நல்லூர்: ரூ. 10 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் பறிமுதல்

கிருஷ்ணகிரி மாவட்டம், நல்லூர் அருகே பேகேப்பள்ளி சின்னார் ஏரி அருகே ஒரு குடோனில் அனுமதியின்றி பட்டாசுகளை பதுக்கி வைத்திருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதை அடுத்து வி. ஏ. ஒ. கோபி மற்றும் நல்லூர் போலீசார் அந்த குடோனில் நேற்று முன்தினம்(அக்.27) சோதனை செய்தனர். அந்த குடோனில் 600 கிலோ அளவுக்கு மட்டுமே பட்டாசுகள் வைக்க அனுமதிக்கப்பட்ட நிலையில் அதை மீறி 33 ஆயிரம் கிலோ கூடுதலாக வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ. 10 லட்சம் ஆகும். இதை வைத்திருந்ததாக ஓசூர் பெத்த எலசகிரியை சேர்ந்த சந்திரசேகர ரெட்டி (45) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வீடியோஸ்


கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி: தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கும் நிகழ்ச்சி
Oct 29, 2024, 03:10 IST/ஊத்தங்கரை
ஊத்தங்கரை

கிருஷ்ணகிரி: தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கும் நிகழ்ச்சி

Oct 29, 2024, 03:10 IST
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பேரூராட்சியில் பணியாற்றுகின்ற தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந் நிகழ்ச்சிக்கு ஊத்தங்கரை காவல் ஆய்வாளர் ரா. முருகன் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் ரவிசங்கர், மருத்துவர் மதன்குமார், அரிமா சங்க பொறுப்பாளர் ராஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊத்தங்கரை பேரூராட்சியில் பணியாற்றுகின்ற தூய்மை பணியாளர்களுக்கும் திடக்கழிவு சுய உதவி குழு பணியாளர்களுக்கும் புத்தாடைகள், இனிப்பு, காரம், பிரியாணி ஆகியவற்றை அனைத்து வணிகர் சங்க பொறுப்பாளர்கள் உமாபதி, மணி என்கிற செங்கோடன், அரிமா ஆர்கே ஓட்டல் ராஜா, லோகேஷ் சேகர், சின்ராஜ் என்கிற சதீஷ், உதவி தலைமை ஆசிரியர் கு. கணேசன் ஆகியோர் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள், ஓட்டுநர்கள், பரப்புரையாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் ஒன்றாக இணைந்து உணவு உண்டு தீபாவளி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜேஆர்சி ஆசிரியர் கணேசன் செய்திருந்தார்.