போச்சம்பள்ளி: சுகாதாரமற்ற மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி.. புலம்பும் மக்கள்
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள ஆவலக்கம்பட்டி என்ற கிராமம் உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர். இங்கு 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை தொட்டி மேற்பகுதியில் சிமெண்ட் சிலாப்புகள் உடைந்து உள்ளே விழுந்து சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. இதில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யபடுவதாக கூறப்படுகிறது. இதனால் பல்வேறு நோய் வருவதாக அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த மேல்நிலை நீர்தேக்கத்தொட்டியை அகற்றிவிட்டு புதிய தொட்டியை கட்டி ஒகேனக்கல் குடிநீர் வழங்க அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.