மத்தூரில் கார் டிரைவர் குடும்பத்துடன் சாலை மறியல்.

85பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள மத்தூர் அடுத்த மிண்டிகிரி பகுதியை சேர்ந்தவர் செந் தில்நாதன் (48) கார் டிரைவர். இதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணி (65) இவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற் பட்டு வந்தது.

இதுகுறித்து மத்தூர் காவல் நிலையத்தில் செந்தில்நாதன் புகார் செய்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே நேற்று சுப்பிரமணி, செந்தில்நாதனை இரும்பு கம்பியால் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் அவர் காயம் அடைந்தார். இந்த தகராறு குறித்து ஏற்கனவே கொடுத்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து செந்தில்நாதன், தனது குடும்பத்தினருடன் மத்தூர் பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டார்.

இதுதொ டர்பாக நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறியதால் அவர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி