கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள மாதம்பதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்(30) விவசாயியான. இவர் கடந்த 31-ஆம் தனது விவசாய நிலத்துக்கு சென்றார். பின்னர் அவர் மாலையில் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. இதை பார்த்து சுரேஷ் வீட்டுக்கு சென்று பார்த்தார். அப்போது பீரோவில் வைத்திருந்த 10 பவுன் நகை, 50 ஆயிரம் ரூபாய் பணம் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து அவர் மத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். இதில் சுரேஷ் எப்போதும் வீட்டை பூட்டிவிட்டு சாவியை மறைவான இடத்தில் வைப்பது வழக்கமாக கொண்டுள்ளார். இதை மர்ம நபர்கள் நோட்டமிட்டு வீட்டில் யாரும் இல்லாத போது சாவியை எடுத்து திறந்து நகை, பணத்தை திருடி சென் றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை டி வருகின்றனர்.