நடை பயிற்சியை விடாமல் கடைபிடிப்பதன் மூலம் சுகர், பிபி கட்டுக்குள் இருக்கும். இதய ஆரோக்கியமும் மேம்படும். ஒருவர் 1 மணி நேரத்தில் தொடர்ந்து 5000 அடிகள் நடந்தால் அவருக்கு பல அற்புத நன்மைகள் கிடைக்கின்றன. அதற்காக, வேகமாக நடைபயிற்சி செய்ய வேண்டியதில்லை, இடையிடையே இடைவெளிகளை எடுத்துக்கொண்டு 5000 அடிகளை நிறைவு செய்யலாம். இதன் மூலம் கூடுதல் கலோரிகளை எரிக்க உதவுகிறது. ரத்த ஓட்டத்தையும் மேம்படுத்துகிறது, இதனால் தசை வலியிலிருந்து விடுபடலாம்.