கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியில் கடந்த இரண்டு தினங்களாக மழை இல்லாத நிலையில் இன்று அதிகாலை முதல் அரசம்பட்டி, புலியூர், பாரூர், மஞ்சமேடு உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று அதிகாலை முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி வருகிறது. பெய்து வரும் மழையால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்காளானார்கள்.