குமரி மாவட்டத்தில் கிடைக்கும் அயனி சக்கை வேறு எங்கும் கிடைக்காத ஒரு அரிய வகை பழமாகும். டிசம்பர் தொடங்கி ஏப்ரல் வரை மட்டுமே இந்த பழம் கிடைக்கும். பலாப்பழத்தை போன்ற தோற்றத்தில் இருந்தாலும் உருவத்தில் மிகச் சிறியது. இதன் சுவையும் அலாதியானது. குமரி மாவட்டத்தில் மாத்தூர், திருவட்டாறு, திற்பரப்பு ஆகிய இடங்களுக்கு செல்லும் வழியில் இந்த மரங்கள் அதிகம் வளர்ந்திருக்கும். குமரிக்கு சென்றால் இதை மறக்காமல் வாங்கி சாப்பிடுங்கள்.