வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

83பார்த்தது
கரூர் மாவட்டம் குளித்தலை வட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு பத்திர பதிவுத்துறை தலைவர் மற்றும் கரூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இன்று வருவாய் துறை சம்பந்தப்பட்ட பட்டா பெயர் மாற்றம், முதியோர் உதவித்தொகை, விலையில்லா வீட்டு மனை பட்டா, முதல்வர் தனிப்பிரிவு மனுக்கள், லேப்டாப் பில் பதிவுகள் உள்ளிட்ட அனைத்து கோப்புகளை ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், குளித்தலை சார் ஆட்சியர் சுவாதி ஸ்ரீ , குளித்தலை வட்டாட்சியர் இந்துமதி, தலைமை இடத்து துணை வட்டாட்சியர் ஜெயவேல் காந்தன், மண்டல வட்டாட்சியர் நீதி ராஜன் உள்ளிட்ட வருவாய் துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

இறுதியாக 5 பயனாளிகளுக்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி