கரூர் கிழக்கு மாவட்டம் குளித்தலை ஒன்றியத்திற்கு உட்பட்ட பொய்யாமணி ஊராட்சி சார்ந்த மாற்றுக் கட்சியை சார்ந்த பெண்கள் இன்று தங்களை தமிழக வெற்றிக் கழகத்தில் அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டனர். இந்த விழாவில் கரூர் கிழக்கு மாவட்ட இணைச் செயலாளர் சதாசிவம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரம்யா, குளித்தலை ஒன்றிய இணைச் செயலாளர் தியாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.