அஇஅதிமுக அம்மா பேரவை சார்பில் மாவட்ட செயலாளர் நெடுஞ்செழியன் தலைமையில் அரசின் சரித்திர சாதனைகள் குறித்து துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி கரூர் மாவட்டம் குளித்தலை சுங்ககேட் பகுதியில் இன்று காலை 8. 30 மணி அளவில் தொடங்கியது. சுங்ககேட் பகுதியில் இருந்து பேருந்து நிலையம், ரயில்வே நிலையம், மாரியம்மன் கோவில் தெரு வழியாக பெரிய பாலம் வரை மூன்று கிலோமீட்டர் ஊர்வலமாக நடந்தே சென்று வழி நெடுகிலும் பொதுமக்கள் மற்றும் வணிக கடை வியாபாரிகளிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
இந்நிகழ்வில் மாவட்ட பிரதிநிதி திருவிக, மாவட்ட மாணவரணி செயலாளர் சரவணன் மற்றும் குளித்தலை கிழக்கு ஒன்றிய செயலாளர் கருணாகரன், மேற்கு ஒன்றிய செயலாளர் விஜயவிநாயகம், தோகைமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகர், தோகைமலை மேற்கு ஒன்றிய செயலாளர் ரெங்கசாமி, கிருஷ்ணராயபுரம் ஒன்றிய செயலாளர் இளங்குமரன், குளித்தலை நகர செயலாளர் மணிகண்டன், மருதூர் பேரூர் செயலாளர் தமிழ்செல்வன், மருதூர் 5 ஆவது வார்டு கிளை செயலாளர் பாலகிருஷ்ணன் மற்றும் ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டு பொதுமக்களிடம் துண்டறிக்கைகளை வழங்கினர்.