ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் மிக முக்கிய போட்டியான இந்தியா - பாகிஸ்தான் மோதல் நாளை (பிப். 23) நடைபெறுகிறது. இந்திய அணியில், பிரதான வேகப்பந்துவீச்சாளர் பும்ரா இடம்பெறாதது பலவீனமாகவே பார்க்கப்படுகிறது. தேவைப்படும் நேரத்தில் எதிரணி ரன் ரேட்டைக் குறைப்பது, விக்கெட் வீழ்த்துவது என அவர் சிறப்பாக செயல்பட்டு வந்துள்ளார். அவரின் இடத்தை நிரப்ப வேண்டிய கட்டாயத்தில் ஷமி இருக்கிறார்.