ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் நாளை (பிப். 23) இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் மோதுகின்றன. மோசமாக பீல்டிங் செய்வது யார் என்பதில் பாகிஸ்தானுடன் போட்டியிடும் அளவுக்கு இந்திய அணியின் பீல்டிங் உள்ளது. வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் ரோஹித் கைக்கு கிடைத்த கேட்சை தவறவிட்டார். ஸ்டம்பிங் வாய்ப்பை விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுல் தவறவிட்டார். எனவே பீல்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும்.