பொதுத் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் தொடர்ந்து படித்துக்கொண்டு இருக்காமல் சிறிய இடைவெளிக் கொடுத்து அமைதியாக இருப்பது மனதை சாந்தப்படுத்த உதவும். தினசரி உடற்பயிற்சி செய்வதை மாணவர்கள் பழக்கமாக மாற்றிக்கொள்ள வேண்டும். காலை அல்லது மாலையில் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இதனுடன் சிறிய அளவிலான மூச்சுப் பயிற்சி, மனதை நிலைப்படுத்த உதவும் தியானம் ஆகியவற்றையும் முறைப்படி செய்வது புத்துணர்ச்சி தரும்.