பொதுத் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் முந்தைய ஆண்டு வினாத்தாள்களை வைத்து தேர்வு எழுதி பார்ப்பது ஒரு சிறப்பான முன்னோட்டமாக இருக்கும். படித்தவரை உள்ள பாடங்களுக்கு நீங்களே ஒரு சிறிய தேர்வு வைத்துக்கொள்ளவும். படித்தவரை எவ்வளவு தெரிகிறது, என்னென்ன மேலும் படிக்க வேண்டும் என்பதை குறித்து அறிந்துகொள்ள உதவும். வாரத்திற்கு ஒரு முறை இத்தேர்வை எழுதி வந்தால் நிஜ தேர்வுக்கான பயம் இருந்தாலும் குறையும்.