கிருஷ்ணராயபுரம் - Krishnarayapuram

கரூர்: ஷேர் ஆட்டோ மீது லாரி மோதி விபத்து

கரூர் மாவட்டம், திருமாநிலையூர், முதல் கிழக்கு தெருவை சேர்ந்தவர் கண்ணன் வயது 50. ஷேர் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நவம்பர் 10ஆம் தேதி மாலை 5 மணி அளவில், திருச்சி- சுக்காலியூர் செல்லும் சாலையில் ஷேர் ஆட்டோவை ஓட்டிச் சென்றார். இவரது வாகனம் ஏமூர் கிராமம் அருகே உள்ள பாலம் அருகில் சென்ற போது, அரியலூர் மாவட்டம், சுண்டக்குடி பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி வயது 61 என்பவர் வேகமாக ஓடி வந்த லாரி கண்ணன் ஓட்டிச் சென்ற ஆட்டோ மீது மோதி விபத்து ஏற்பட்டது.  இந்த விபத்தில் ஆட்டோவை ஓட்டிச் சென்ற கண்ணனுக்கு வலது கை முட்டி, வலது தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவம் தொடர்பாக கண்ணன் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை கொண்ட வெள்ளியணை காவல்துறையினர், இது தொடர்பாக லாரியை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய பழனிச்சாமி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

வீடியோஸ்


వికారాబాద్ జిల్లా