பச்சைக்கல்மேடு அருகே டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல். ஒருவர் படு காயம்.
கரூர் மாவட்டம், வெள்ளியணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொரணி அருகே உள்ள அழகா புரியனூர் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர் வயது 35.
இவர் நவம்பர் 4-ம் தேதி மதியம் 2: 45 மணி அளவில், கரூரிலிருந்து சேங்கல் செல்லும் சாலையில், அவரது டூவீலரில் சென்று கொண்டிருந்தார
இவரது வாகனம் பச்சைக்கல்மேடு அருகே வந்தபோது, எதிர் திசையில் கரூர் மாவட்டம், காந்திகிராமம் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் வயது 46 என்பவர் மற்றொரு டூவீலரில் வேகமாக வந்து, பாஸ்கர் ஓட்டிச் சென்ற டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் வாகனத்துடன் கீழே விழுந்ததில் பாஸ்கருக்கு தலையில் மற்றும் இடதுபுற கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
சம்பவம் தொடர்பாக பாஸ்கர் அளித்த புகாரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், டூவீலரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி, விபத்து ஏற்படுத்தி சதீஷ்குமார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வெள்ளியனை காவல்துறையினர்.