கரூர் மாவட்டம், குளித்தலை அருகே லாலாபேட்டையைச் சேர்ந்தவர் பிரவீன். இவர் நேற்று தனது புதிய ஸ்ப்ளெண்டர் பைக்கில் பிள்ளாபாளையம் நூலகம் அருகே சாலையோரம் சென்ற போது எதிரே அதே ஊரை சேர்ந்த சண்முகப்ரியன் என்பவர் ஓட்டி வந்த பைக்கும் நேருக்கு நேர் மோதிக் கொண்டு இருவரும் காயம் அடைந்தனர். காயம் அடைந்த இருவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அப்போது சண்முகப்பிரியன் தரப்பைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் போதையில், லாலாபேட்டை பகுதியை சேர்ந்த பிரவீன் ஓட்டி வந்த புதிய பைக்கினை தீயிட்டு கொளுத்தினர்.
இதனால் சாலையின் நடுவே சுமார் 2 மணி நேரமாக பைக் தீயில் எறிந்து முழுவதும் நாசமாகியது.
இதுகுறித்து லாலாபேட்டை போலீசார் நேற்று விசாரணை நடத்தி வருகின்றனர்