கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டம் சித்தலவாய் ரயில் நிலையத்தில் முன்பதிவு மையம் செயல்பட்டு வந்தது. எந்த ஒரு அறிவிப்பும் இன்றி ரயில்வே நிர்வாகம் முன்பதிவு மையத்தை ரத்து செய்தது. இதையடுத்து சித்தலவாய் ரயில் நிலையம் பாதுகாப்பு குழு மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கோரிக்கை வைத்ததை அடுத்து கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி ரயில் நிலையத்தை இன்று ஆய்வு செய்தார். அப்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளர் பொ. மகாமுனி முன்பதிவு மையத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும், கிருஷ்ணராயபுரம் பேரூராட்சியில் சமுதாயக்கூடம் அமைத்து தர வலியுறுத்தியும், வீரராக்கியம், மாயனூர் ஆகிய பகுதிகளில் ரயில்வே குகைவழிப்பாதை அல்லது மேம்பாலம் அமைக்க வேண்டும் என வலயுறுத்தி கோரிக்கை மனு அளித்தனர். இதில் விசிக சந்தோஸ், திமுக, காங்கிரஸ் நிர்வாகிகள், பேரூராட்சி உறுப்பினர்கள், சித்தலவாய் ரயில் நிலையம் பாதுகாப்பு குழுவினர் என பலர் கலந்து கொண்டனர்.